Other Translations: Deutsch , English , ગુજરાતી , हिन्दी , Italiano , Polski , ру́сский язы́к , Srpski
From: ,
Majjhima Nikāya 1 இடை நீள பேருரைகள் 1
Mūlapariyāyasutta எல்லாவற்றின் அடிப்படை மூலம்
Evaṁ me sutaṁ—நான் இவ்வாறாகக் கேட்டேன்
ekaṁ samayaṁ bhagavā ukkaṭṭhāyaṁ viharati subhagavane sālarājamūle. ஒரு சமயம் புத்தர் உக்கட்ட நகரத்தின் அருகே இருந்த சுபக வனத்தில் ஒரு மிகப்பெரிய குங்கிலிய மரத்தின் அடியில் தங்கியிருந்தார்.
Tatra kho bhagavā bhikkhū āmantesi: அச்சமயம் புத்தர் பிக்குகளைப் பார்த்து அழைத்தார்.
“bhikkhavo”ti. “பிக்குகளே!”
“Bhadante”ti te bhikkhū bhagavato paccassosuṁ. அவர்களும், “ஆம் ததாகதரே” என்று பதில் அளித்தனர்.
Bhagavā etadavoca: புத்தர் சொன்னார்,
“sabbadhammamūlapariyāyaṁ vo, bhikkhave, desessāmi. “பிக்குகளே, நான் உங்களுக்கு எல்லாவற்றின் அடிப்படை மூலம் என்ன என்பதை விளக்குகிறேன்.
Taṁ suṇātha, sādhukaṁ manasi karotha, bhāsissāmī”ti. நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கவனமாக கேளுங்கள்”, என்று கூறினார்.
“Evaṁ, bhante”ti kho te bhikkhū bhagavato paccassosuṁ. அவர்கள் “அப்படியே செய்கிறோம் ததாகதரே”, என்று பதிலுரைத்தனர்.
Bhagavā etadavoca: அப்போது புத்தர் இவ்வாறாகக் கூறினார்.
“Idha, bhikkhave, assutavā puthujjano ariyānaṁ adassāvī ariyadhammassa akovido ariyadhamme avinīto, sappurisānaṁ adassāvī sappurisadhammassa akovido sappurisadhamme avinīto—“மெய்யுணர்ந்த சான்றோர்களை அறிந்திராத மற்றும் மெய்யுணர்ந்த சான்றோர்களின் போதனைகளில் திறமையும், பயிற்சியும் அற்ற, தம்மத்தை அறியாத, சாதாரண ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அறவோரை அறியாமலும் மற்றும் அறவோரின் போதனைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் பெறாமலும் இருக்கிறார்.
pathaviṁ pathavito sañjānāti; அவர் நிலத்தை நிலமாகவே அடையாளம் காண்கிறார்.
pathaviṁ pathavito saññatvā pathaviṁ maññati, pathaviyā maññati, pathavito maññati, pathaviṁ meti maññati, pathaviṁ abhinandati. நிலத்தை நிலமாகவே காண்பதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுகிறார். நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Āpaṁ āpato sañjānāti; அவர் நீரை நீராகவே அடையாளம் காண்கிறார்.
āpaṁ āpato saññatvā āpaṁ maññati, āpasmiṁ maññati, āpato maññati, āpaṁ meti maññati, āpaṁ abhinandati. நீரை நீராகவே காண்பதால், அவர் நீரை, நீராகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக நீருக்குள் (தன்னை) கருதுகிறார். நீரிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் நீரின் மீது பற்றுக்கொண்டு “நீரை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Tejaṁ tejato sañjānāti; அவர் நெருப்பை நெருப்பாகவே அடையாளம் காண்கிறார்.
tejaṁ tejato saññatvā tejaṁ maññati, tejasmiṁ maññati, tejato maññati, tejaṁ meti maññati, tejaṁ abhinandati. நெருப்பை நெருப்பாகவே காண்பதால், அவர் நெருப்பை, நெருப்பாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக நெருப்புக்குள் (தன்னை) கருதுகிறார். நெருப்பிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் நெருப்பின் மீது பற்றுக்கொண்டு “நெருப்பை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Vāyaṁ vāyato sañjānāti; அவர் வாயுவை வாயுவாகவே அடையாளம் காண்கிறார்.
vāyaṁ vāyato saññatvā vāyaṁ maññati, vāyasmiṁ maññati, vāyato maññati, vāyaṁ meti maññati, vāyaṁ abhinandati. வாயுவை வாயுவாகவே காண்பதால், அவர் வாயுவை, வாயுவாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக வாயுவுக்குள் (தன்னை) கருதுகிறார். வாயுவிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் வாயுவின் மீது பற்றுக்கொண்டு “வாயுவை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Bhūte bhūtato sañjānāti; அவர் உயிரினங்களை உயிரினங்களாகவே அடையாளம் காண்கிறார்.
bhūte bhūtato saññatvā bhūte maññati, bhūtesu maññati, bhūtato maññati, bhūte meti maññati, bhūte abhinandati. அவர் உயிரினங்களை உயிரினங்களாகவே அடையாளம் காண்கிறார். உயிரினங்களை உயிரினங்களாகவே காண்பதால், அவர் உயிரினங்களை உயிரினங்களாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக உயிரினங்களுக்குள் (தன்னை) கருதுகிறார். உயிரினங்களிடமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர். உயிரினங்களின் மீது பற்றுக்கொண்டு “உயிரினங்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Deve devato sañjānāti; அவர் தேவர்களை தேவர்களாகவே அடையாளம் காண்கிறார்.
deve devato saññatvā deve maññati, devesu maññati, devato maññati, deve meti maññati, deve abhinandati. தேவர்களை தேவர்களாகவே காண்பதால், அவர் தேவர்களை தேவர்களாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக தேவர்களில் (தன்னை) கருதுகிறார். தேவர்களில் இருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் தேவர்களின் மீது பற்றுக்கொண்டு “தேவர்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Pajāpatiṁ pajāpatito sañjānāti; அவர் பிரஜாபதியை பிரஜாபதியாகவே காண்கிறார்.
pajāpatiṁ pajāpatito saññatvā pajāpatiṁ maññati, pajāpatismiṁ maññati, pajāpatito maññati, pajāpatiṁ meti maññati, pajāpatiṁ abhinandati. அவர் பிரஜாபதியை பிரஜாபதியாகவே காண்பதால், அவர் பிரஜாபதியை பிரஜாபதியாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக பிரஜாபதிக்குள் (தன்னை) கருதுகிறார். பிரஜாபதியிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் பிரஜாபதியின் மீது பற்றுக்கொண்டு “பிரஜாபதியை நான்,எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Brahmaṁ brahmato sañjānāti; அவர் பிரம்மத்தை பிரம்மமாகவே அடையாளம் காண்கிறார்.
brahmaṁ brahmato saññatvā brahmaṁ maññati, brahmasmiṁ maññati, brahmato maññati, brahmaṁ meti maññati, brahmaṁ abhinandati. பிரம்மத்தை பிரம்மமாகவே காண்பதால், அவர் பிரம்மத்தை, பிரம்மமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக பிரம்மத்துக்குள் (தன்னை) கருதுகிறார். பிரம்மத்திடமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் பிரம்மத்தின் மீது பற்றுக்கொண்டு “பிரம்மத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Ābhassare ābhassarato sañjānāti; அவர் பேரொளி மிக்க ஆபாஸ்வர தேவர்களை ஆபாஸ்வர தேவர்களாகவே அடையாளம் காண்கிறார்.
ābhassare ābhassarato saññatvā ābhassare maññati, ābhassaresu maññati, ābhassarato maññati, ābhassare meti maññati, ābhassare abhinandati. பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்களை ஆபாஸ்ஸர தேவர்களாகவே காண்பதால், அவர் ஆபாஸ்ஸர தேவர்களை ஆபாஸ்ஸர தேவர்களாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக ஆபாஸ்ஸர தேவர்களுக்குள் (தன்னை) கருதுகிறார். ஆபாஸ்ஸர தேவர்களிடமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் ஆபாஸ்ஸர தேவர்களின் மீது பற்றுக்கொண்டு “ஆபாஸ்ஸர தேவர்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Subhakiṇhe subhakiṇhato sañjānāti; அவர் பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்களை சுபகிண்ண தேவர்களாகவே அடையாளம் காண்கிறார்.
subhakiṇhe subhakiṇhato saññatvā subhakiṇhe maññati, subhakiṇhesu maññati, subhakiṇhato maññati, subhakiṇhe meti maññati, subhakiṇhe abhinandati. பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்களை சுபகிண்ண தேவர்களாகவே காண்பதால், அவர் சுபகிண்ண தேவர்களை, சுபகிண்ண தேவர்களாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். அவர் தவறாக சுபகிண்ண தேவர்களுக்குள் (தன்னை) கருதுகிறார். சுபகிண்ண தேவர்களிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் சுபகிண்ண தேவர்களின் மீது பற்றுக்கொண்டு “சுபகிண்ண தேவர்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Vehapphale vehapphalato sañjānāti; அவர் பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்களை, வேஹப்பல தேவர்களாகவே அடையாளம் காண்கிறார்.
vehapphale vehapphalato saññatvā vehapphale maññati, vehapphalesu maññati, vehapphalato maññati, vehapphale meti maññati, vehapphale abhinandati. பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்களை, வேஹப்பல தேவர்களாகவே காண்பதால், அவர் வேஹப்பல தேவர்களை, வேஹப்பல தேவர்களாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக வேஹப்பல தேவர்களுக்குள் (தன்னை) கருதுகிறார். வேஹப்பல தேவர்களிடமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் வேஹப்பல தேவர்களின் மீது பற்றுக்கொண்டு “வேஹப்பல தேவர்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Abhibhuṁ abhibhuto sañjānāti; அவர் உன்னத வெற்றியாளரை உன்னத வெற்றியாளராகவே அடையாளம் காண்கிறார்.
abhibhuṁ abhibhuto saññatvā abhibhuṁ maññati, abhibhusmiṁ maññati, abhibhuto maññati, abhibhuṁ meti maññati, abhibhuṁ abhinandati. உன்னத வெற்றியாளரை உன்னத வெற்றியாளராகவே காண்பதால், அவர் உன்னத வெற்றியாளரை, உன்னத வெற்றியாளராகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக உன்னத வெற்றியாளர்களுக்குள் (தன்னை) கருதுகிறார். உன்னத வெற்றியாளர்களிடமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் உன்னத வெற்றியாளர்கள் மீது பற்றுக்கொண்டு “உன்னத வெற்றியாளர்களை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Ākāsānañcāyatanaṁ ākāsānañcāyatanato sañjānāti; அவர் எல்லையற்ற அண்டவெளியை எல்லையற்ற அண்டவெளியாகவேஅடையாளம் காண்கிறார்.
ākāsānañcāyatanaṁ ākāsānañcāyatanato saññatvā ākāsānañcāyatanaṁ maññati, ākāsānañcāyatanasmiṁ maññati, ākāsānañcāyatanato maññati, ākāsānañcāyatanaṁ meti maññati, ākāsānañcāyatanaṁ abhinandati. எல்லையற்ற அண்டவெளியை எல்லையற்ற அண்டவெளியாகவே காண்பதால், அவர் எல்லையற்ற அண்டவெளியை எல்லையற்ற அண்டவெளியாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக எல்லையற்ற அண்டவெளிக்குள் (தன்னை) கருதுகிறார். எல்லையற்ற அண்டவெளியிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் எல்லையற்ற அண்டவெளியின் மீது பற்றுக்கொண்டு “எல்லையற்ற அண்டவெளியை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Viññāṇañcāyatanaṁ viññāṇañcāyatanato sañjānāti; அவர் எல்லையற்ற மெய்யுணர்வை மெய்யுணர்வாகவே அடையாளம் காண்கிறார்.
viññāṇañcāyatanaṁ viññāṇañcāyatanato saññatvā viññāṇañcāyatanaṁ maññati, viññāṇañcāyatanasmiṁ maññati, viññāṇañcāyatanato maññati, viññāṇañcāyatanaṁ meti maññati, viññāṇañcāyatanaṁ abhinandati. எல்லையற்ற மெய்யுணர்வை மெய்யுணர்வாகவே காண்பதால், அவர் எல்லையற்ற மெய்யுணர்வை மெய்யுணர்வாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக மெய்யுணர்வுக்குள் (தன்னை) கருதுகிறார். மெய்யுணர்விலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் மெய்யுணர்வின் மீது பற்றுக்கொண்டு “மெய்யுணர்வை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Ākiñcaññāyatanaṁ ākiñcaññāyatanato sañjānāti; அவர் சுயத்தின் வெறுமையை வெறுமையாகவே அடையாளம் காண்கிறார்.
ākiñcaññāyatanaṁ ākiñcaññāyatanato saññatvā ākiñcaññāyatanaṁ maññati, ākiñcaññāyatanasmiṁ maññati, ākiñcaññāyatanato maññati, ākiñcaññāyatanaṁ meti maññati, ākiñcaññāyatanaṁ abhinandati. சுயத்தின் வெறுமையை வெறுமையாகவே காண்பதால், அவர் சுயத்தின் வெறுமையை, வெறுமையாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக வெறுமைக்குள் (தன்னை) கருதுகிறார். வெறுமையிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் வெறுமையின் மீது பற்றுக்கொண்டு “வெறுமையை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Nevasaññānāsaññāyatanaṁ nevasaññānāsaññāyatanato sañjānāti; புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை எண்ணங்கள் ஒடுங்கிய நிலையாகவே காண்பதால், அவர் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை, எண்ணங்கள் ஒடுங்கிய நிலையாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக எண்ணங்கள் ஒடுங்கிய நிலைக்குள் (தன்னை) கருதுகிறார். எண்ணங்கள் ஒடுங்கிய நிலையிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையின் மீது பற்றுக்கொண்டு “எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
nevasaññānāsaññāyatanaṁ nevasaññānāsaññāyatanato saññatvā nevasaññānāsaññāyatanaṁ maññati, nevasaññānāsaññāyatanasmiṁ maññati, nevasaññānāsaññāyatanato maññati, nevasaññānāsaññāyatanaṁ meti maññati, nevasaññānāsaññāyatanaṁ abhinandati. புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை எண்ணங்கள் ஒடுங்கிய நிலையாகவே காண்பதால், அவர் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை எண்ணங்கள் ஒடுங்கிய நிலையாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக எண்ணங்கள் ஒடுங்கிய நிலைக்குள் (தன்னை) கருதுகிறார். எண்ணங்கள் ஒடுங்கிய நிலையிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையின் மீது பற்றுக்கொண்டு “எண்ணங்கள் ஒடுங்கிய நிலையை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Diṭṭhaṁ diṭṭhato sañjānāti; அவர் பார்த்ததை பார்த்த விதமாகவே அடையாளம் காண்கிறார்.
diṭṭhaṁ diṭṭhato saññatvā diṭṭhaṁ maññati, diṭṭhasmiṁ maññati, diṭṭhato maññati, diṭṭhaṁ meti maññati, diṭṭhaṁ abhinandati. பார்த்ததை பார்த்த விதமாகவே காண்பதால், அவர் பார்த்ததை பார்த்த விதமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக பார்த்ததற்குள் (தன்னை) கருதுகிறார். பார்த்ததிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் பார்த்ததன் மீது பற்றுக்கொண்டு “பார்த்ததை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Sutaṁ sutato sañjānāti; அவர் கேட்டதை கேட்ட விதமாகவே அடையாளம் காண்கிறார்.
sutaṁ sutato saññatvā sutaṁ maññati, sutasmiṁ maññati, sutato maññati, sutaṁ meti maññati, sutaṁ abhinandati. கேட்டதை கேட்ட விதமாகவே காண்பதால், அவர் கேட்டதை கேட்ட விதமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக கேட்டதற்குள் (தன்னை) கருதுகிறார். கேட்டதிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் கேட்டதன் மீது பற்றுக்கொண்டு “கேட்டதை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Mutaṁ mutato sañjānāti; அவர் மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை புலனுணர்வாகவே அடையாளம் காண்கிறார்.
mutaṁ mutato saññatvā mutaṁ maññati, mutasmiṁ maññati, mutato maññati, mutaṁ meti maññati, mutaṁ abhinandati. மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை புலனுணர்வாகவே காண்பதால், அவர் மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை புலனுணர்வாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக புலன் உணர்வுகளுக்குள் (தன்னை) கருதுகிறார். புலன் உணர்வுகளிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் புலன் உணர்வுகளின் மீது பற்றுக்கொண்டு “புலன் உணர்வுகளை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Viññātaṁ viññātato sañjānāti; அவர் மனதால் அறிந்தவற்றை மனதால் அறிந்தவாறே அடையாளம் காண்கிறார்.
viññātaṁ viññātato saññatvā viññātaṁ maññati, viññātasmiṁ maññati, viññātato maññati, viññātaṁ meti maññati, viññātaṁ abhinandati. மனதால் அறிந்தவற்றை மனதால் அறிந்தவாறே காண்பதால், அவர் மனதால் அறிந்தவற்றை மனதால் அறிந்தவாறே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக மனதால் அறிந்தவற்றுக்குள் (தன்னை) கருதுகிறார். மனதால் அறிந்தவற்றில் இருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் மனதால் அறிந்தவற்றின் மீது பற்றுக்கொண்டு “மனதால் அறிந்தவற்றை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Ekattaṁ ekattato sañjānāti; அவர் ஒற்றைத் தன்மையை ஒற்றைத் தன்மையாகவேஅடையாளம் காண்கிறார்.
ekattaṁ ekattato saññatvā ekattaṁ maññati, ekattasmiṁ maññati, ekattato maññati, ekattaṁ meti maññati, ekattaṁ abhinandati. ஒற்றைத் தன்மையை ஒற்றைத் தன்மையாகவேகாண்பதால், அவர் ஒற்றைத் தன்மையை ஒற்றைத் தன்மையாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக ஒற்றைத் தன்மைக்குள் (தன்னை) கருதுகிறார். ஒற்றைத் தன்மையிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் ஒற்றைத் தன்மையின் மீது பற்றுக்கொண்டு “ஒற்றைத் தன்மையைநான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Nānattaṁ nānattato sañjānāti; அவர் பன்முகத்தன்மையை பன்முகத்தன்மையாகவேஅடையாளம் காண்கிறார்.
nānattaṁ nānattato saññatvā nānattaṁ maññati, nānattasmiṁ maññati, nānattato maññati, nānattaṁ meti maññati, nānattaṁ abhinandati. பன்முகத்தன்மையை பன்முகத்தன்மையாகவேகாண்பதால், அவர் பன்முகத்தன்மையை பன்முகத்தன்மையாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக பன்முகத் தன்மைக்குள் (தன்னை) கருதுகிறார். பன்முகத் தன்மையிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் பன்முகத்தன்மையின் மீது பற்றுக்கொண்டு “பன்முகத்தன்மையை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Sabbaṁ sabbato sañjānāti; அவர் அனைத்தையும் அனைத்துமாகவே அடையாளம் காண்கிறார்.
sabbaṁ sabbato saññatvā sabbaṁ maññati, sabbasmiṁ maññati, sabbato maññati, sabbaṁ meti maññati, sabbaṁ abhinandati. அனைத்தையும் அனைத்துமாகவேகாண்பதால், அவர் அனைத்தையும் அனைத்துமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக அனைவற்றினுள் (தன்னை) கருதுகிறார். அனைத்திடமுமிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் அனைத்தின் மீது பற்றுக்கொண்டு “அனைவற்றையும் நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Nibbānaṁ nibbānato sañjānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறை வீடுபேறாகவே அடையாளம் காண்கிறார்.
nibbānaṁ nibbānato saññatvā nibbānaṁ maññati, nibbānasmiṁ maññati, nibbānato maññati, nibbānaṁ meti maññati, nibbānaṁ abhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறை வீடுபேறாகவே காண்பதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறை, வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்கிறார்.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுகிறார். வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுகிறார். அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Apariññātaṁ tassā’ti vadāmi. அவரால் அதன் தன்மையை முழுமையாக அறியப்படாததே காரணம் என்று நான் கூறுகிறேன்.
Puthujjanavasena paṭhamanayabhūmiparicchedo niṭṭhito.
Yopi so, bhikkhave, bhikkhu sekkho appattamānaso anuttaraṁ yogakkhemaṁ patthayamāno viharati, sopi pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, எந்தவொரு பிக்கு இன்னும் தனது இறுதி இலக்கை அடையாமல், பயிற்சி செய்யும் நிலையில் இருந்து கொண்டு, உன்னதமான, பற்றற்ற வீடுபேறை (நிப்பாணத்தை) நாடி வாழ்கிறாரோ, அவர் நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ mā maññi, pathaviyā mā maññi, pathavito mā maññi, pathaviṁ meti mā maññi, pathaviṁ mābhinandi. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்யக்கூடாது.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருத க் கூடாது. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதக் கூடாது. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கக் கூடாது.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Pariññeyyaṁ tassā’ti vadāmi. அவர் அதன் தன்மையை முழுமையாக அறிய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ mā maññi, nibbānasmiṁ mā maññi, nibbānato mā maññi, nibbānaṁ meti mā maññi, nibbānaṁ mābhinandi. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் வீடுபேறை,வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்யக்கூடாது.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருத க் கூடாது. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதக் கூடாது. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கக் கூடாது.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Pariññeyyaṁ tassā’ti vadāmi. அவர் அதன் தன்மையை முழுமையாக அறிய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
Sekkhavasena dutiyanayabhūmiparicchedo niṭṭhito.
Yopi so, bhikkhave, bhikkhu arahaṁ khīṇāsavo vusitavā katakaraṇīyo ohitabhāro anuppattasadattho parikkhīṇabhavasaṁyojano sammadaññāvimutto, sopi pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த— மனமாசுக்களை நீக்கிய, ஆன்மீகப் பெருவழியை நிறைவு செய்த, செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்த, பற்றாகிய சுமையைக் கீழே இறக்கி வைத்த, தன் இறுதி இலக்கை எய்திய, பிறவித் தளையை முற்றிலுமாக அறுத்தெறிந்து, மெய்யறிவால் வீடுபேறு பெற்ற ஒரு பிக்கு— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Pariññātaṁ tassā’ti vadāmi. அவர் அதன் தன்மையை முழுமையாக அறிந்து கொண்டார் என்று நான் கூறுகிறேன்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.

Khīṇāsavavasena tatiyanayabhūmiparicchedo niṭṭhito.
Yopi so, bhikkhave, bhikkhu arahaṁ khīṇāsavo vusitavā katakaraṇīyo ohitabhāro anuppattasadattho parikkhīṇabhavasaṁyojano sammadaññā vimutto, sopi pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த— மனமாசுக்களை நீக்கிய, ஆன்மீகப் பெருவழியை நிறைவு செய்த, செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்த, பற்றாகிய சுமையைக் கீழே இறக்கி வைத்த, தன் இறுதி இலக்கை எய்திய, பிறவித் தளையை முற்றிலுமாக அறுத்தெறிந்து, மெய்யறிவால் வீடுபேறு பெற்ற ஒரு பிக்கு— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā rāgassa, vītarāgattā. ஏனெனில் அவர் ஆசையை முடிவுக்கு கொண்டு வந்து ஆசையிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā rāgassa, vītarāgattā. ஏனெனில் அவர் ஆசையை முடிவுக்கு கொண்டு வந்து ஆசையிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Khīṇāsavavasena catutthanayabhūmiparicchedo niṭṭhito.
Yopi so, bhikkhave, bhikkhu arahaṁ khīṇāsavo vusitavā katakaraṇīyo ohitabhāro anuppattasadattho parikkhīṇabhavasaṁyojano sammadaññāvimutto, sopi pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த— மனமாசுக்களை நீக்கிய, ஆன்மீகப் பெருவழியை நிறைவு செய்த, செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்த, பற்றாகிய சுமையைக் கீழே இறக்கி வைத்த, தன் இறுதி இலக்கை எய்திய, பிறவித் தளையை முற்றிலுமாக அறுத்தெறிந்து, மெய்யறிவால் வீடுபேறு பெற்ற ஒரு பிக்கு— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā dosassa, vītadosattā. ஏனெனில் அவர் வெறுப்பை முடிவுக்கு கொண்டு வந்து வெறுப்பிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā dosassa, vītadosattā. ஏனெனில் அவர் வெறுப்பை முடிவுக்கு கொண்டு வந்து வெறுப்பிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Khīṇāsavavasena pañcamanayabhūmiparicchedo niṭṭhito.
Yopi so, bhikkhave, bhikkhu arahaṁ khīṇāsavo vusitavā katakaraṇīyo ohitabhāro anuppattasadattho parikkhīṇabhavasaṁyojano sammadaññāvimutto, sopi pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த— மனமாசுக்களை நீக்கிய, ஆன்மீகப் பெருவழியை நிறைவு செய்த, செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்த, பற்றாகிய சுமையைக் கீழே இறக்கி வைத்த, தன் இறுதி இலக்கை எய்திய, பிறவித் தளையை முற்றிலுமாக அறுத்தெறிந்து, மெய்யறிவால் வீடுபேறு பெற்ற ஒரு பிக்கு— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā mohassa, vītamohattā. ஏனெனில் அவர் அறியாமையை முடிவுக்கு கொண்டு வந்து அறியாமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
Khayā mohassa, vītamohattā. ஏனெனில் அவர் அறியாமையை முடிவுக்கு கொண்டு வந்து அறியாமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
Khīṇāsavavasena chaṭṭhanayabhūmiparicchedo niṭṭhito.
Tathāgatopi, bhikkhave, arahaṁ sammāsambuddho pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த, முற்றிலும் தானே முழுமையாக விழிப்படைந்தவருமான புத்தரான, ததாகதரும்— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Pariññātantaṁ tathāgatassā’ti vadāmi. ஏனெனில் அவர் அதன் இறுதி வரையிலான தன்மையை முழுமையாக உணர்ந்து, அறிந்து விட்டார்என்று சொல்கிறேன்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Pariññātantaṁ tathāgatassā’ti vadāmi. ஏனெனில் அவர் அதன் இறுதி வரையிலான தன்மையை முழுமையாக உணர்ந்து, அறிந்து விட்டார்என்று சொல்கிறேன்.
Tathāgatavasena sattamanayabhūmiparicchedo niṭṭhito.
Tathāgatopi, bhikkhave, arahaṁ sammāsambuddho pathaviṁ pathavito abhijānāti; பிக்குகளே, அரஹந்தர் நிலையை அடைந்த, முற்றிலும் தானே முழுமையாக விழிப்படைந்தவருமான புத்தரான, ததாகதரும்— நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிகிறார்.
pathaviṁ pathavito abhiññāya pathaviṁ na maññati, pathaviyā na maññati, pathavito na maññati, pathaviṁ meti na maññati, pathaviṁ nābhinandati. நிலத்தைத் தன் மெய்யறிவால் நிலமாகவே அறிவதால், அவர் நிலத்தை, நிலமாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக நிலத்துக்குள் (தன்னை) கருதுவதில்லை. நிலத்திலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் நிலத்தின் மீது பற்றுக்கொண்டு “நிலத்தை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Nandī dukkhassa mūlan’ti—ஏனெனில் அவர், மகிழ்ச்சியே (அதன் மீதான பற்றே) துக்கத்திற்கு மூலம் என்பதையும்
iti viditvā ‘bhavā jāti bhūtassa jarāmaraṇan’ti. கர்ம வினைகளின் தொடர் இருப்பே மறுபிறப்புக்குக் காரணம் என்பதையும், பிறப்பே முதுமையும், மரணமும் ஏற்படக் காரணம் என்பதையும் அறிந்து உள்ளார்.
Tasmātiha, bhikkhave, ‘tathāgato sabbaso taṇhānaṁ khayā virāgā nirodhā cāgā paṭinissaggā anuttaraṁ sammāsambodhiṁ abhisambuddho’ti vadāmi. பிக்குகளே, அதனாலேயே ததாகதர் அனைத்து வகையான வேட்கைகளையும் முற்றிலும் அழித்து, அகற்றி, நிரந்தரமாக ஒடுக்கி, துறந்து, முழுமையாகக் கைவிட்டதன் மூலமாகவே, உன்னதமான, உவமையற்ற, முற்றிலும் தானே விழிப்படைந்த பேரொளி ஞான நிலையை அடைந்துள்ளார் என்று சொல்கிறேன்.
Āpaṁ …pe… அவர் நீரைத் தன் மெய்யறிவால் நீராகவே அறிகிறார்…
tejaṁ … நெருப்பு …
vāyaṁ … வாயு …
bhūte … உயிரினங்கள் …
deve … தேவர்கள் …
pajāpatiṁ … பிரஜாபதி …
brahmaṁ … பிரம்மம் …
ābhassare … பேரொளி மிக்க ஆபாஸ்ஸர தேவர்கள் …
subhakiṇhe … பேரழகு கொண்ட சுபகிண்ண தேவர்கள் …
vehapphale … பெருந்தவப்பலன் கொண்ட வேஹப்பல தேவர்கள் …
abhibhuṁ … உன்னத வெற்றியாளர் …
ākāsānañcāyatanaṁ … எல்லையற்ற அண்டவெளி …
viññāṇañcāyatanaṁ … எல்லையற்ற மெய்யுணர்வு …
ākiñcaññāyatanaṁ … சுயத்தின் வெறுமை …
nevasaññānāsaññāyatanaṁ … புலன் உணர்வுகளை உள்வாங்கியும் வாங்காமலும் இருக்கும், எண்ணங்கள் ஒடுங்கிய நிலை …
diṭṭhaṁ … பார்த்ததை …
sutaṁ … கேட்டதை …
mutaṁ … மூக்கு,நாக்கு,உடல் ஆகிய புலன்களால் உணர்ந்தவற்றை …
viññātaṁ … மனதால் அறிந்தவற்றை …
ekattaṁ … ஒற்றைத் தன்மையை …
nānattaṁ … பன்முகத்தன்மையை …
sabbaṁ … அனைத்தையும் …
nibbānaṁ nibbānato abhijānāti; அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிகிறார்.
nibbānaṁ nibbānato abhiññāya nibbānaṁ na maññati, nibbānasmiṁ na maññati, nibbānato na maññati, nibbānaṁ meti na maññati, nibbānaṁ nābhinandati. மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே அறிவதால், அவர் மறுபிறவி அறுக்கும் வீடுபேறைத் தன் மெய்யறிவால் வீடுபேறாகவே கற்பனைக் கருத்துருவாக்கம் செய்வதில்லை.அவர் தவறாக வீடுபேறுக்குள் (தன்னை) கருதுவதில்லை. வீடுபேறிலிருந்து (தன்னை) தனித்தும் கருதுவதில்லை. அவர் வீடுபேறின் மீது பற்றுக்கொண்டு “வீடுபேறை நான், எனது”, எனக் கருதி மகிழ்ச்சியில் திளைப்பதில்லை.
Taṁ kissa hetu? அதன் காரணம் என்ன?
‘Nandī dukkhassa mūlan’ti—ஏனெனில் அவர், மகிழ்ச்சியே (அதன் மீதான பற்றே) துக்கத்திற்கு மூலம் என்பதையும்
iti viditvā ‘bhavā jāti bhūtassa jarāmaraṇan’ti. கர்ம வினைகளின் தொடர் இருப்பே மறுபிறப்புக்குக் காரணம் என்பதையும், பிறப்பே முதுமையும், மரணமும் ஏற்படக் காரணம் என்பதையும் அறிந்து உள்ளார்.
Tasmātiha, bhikkhave, ‘tathāgato sabbaso taṇhānaṁ khayā virāgā nirodhā cāgā paṭinissaggā anuttaraṁ sammāsambodhiṁ abhisambuddho’ti vadāmī”ti. பிக்குகளே, அதனாலேயே ததாகதர் அனைத்து வகையான வேட்கைகளையும் முற்றிலும் அழித்து, அகற்றி, நிரந்தரமாக ஒடுக்கி, துறந்து, முழுமையாகக் கைவிட்டதன் மூலமாகவே, உன்னதமான, உவமையற்ற, முற்றிலும் தானே விழிப்படைந்த பேரொளி ஞான நிலையை அடைந்துள்ளார் என்று சொல்கிறேன்.
Tathāgatavasena aṭṭhamanayabhūmiparicchedo niṭṭhito.
Idamavoca bhagavā. இவ்வாறாக புத்தர் கூறினார்.
Na te bhikkhū bhagavato bhāsitaṁ abhinandunti. ஆனால், பிக்குகள் புத்தரின் போதனையைக் கேட்டு மகிழ்ச்சி அடையவில்லை.
Mūlapariyāyasuttaṁ niṭṭhitaṁ paṭhamaṁ.